பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாயை கடன் பெற்றுவிட்டு மோசடியில் ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்ஷி ஆகியோர் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாட்டை விட்டு தப்பியோடினர்.
கடன் மோசடி தொடர்பாக நீரவ் மோடி மீது சிபிஐ, அமலாக்கத் துறை, தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக இந்தியாவில் உள்ள அவரின் பல்வேறு சொத்துக்களை அமலாக்கத் துறையினர் முடக்கினர். இந்நிலையில், "தி டெலிகிராப்" எனும் சர்வதேச நாளிதழின் மூத்த பத்திரிகையாளர் லண்டனில் நீரவ் மோடி சுதந்திரமாக திரியும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும், அவருடன் பல்வேறு வினாக்களை எழுப்பினர். அதற்கு அவர் "மன்னிக்கவும் என்னால் பதில் செல்ல முடியாது " என்று தொடர்ந்து கூறிவிட்டு காரில் புறப்பட்டு சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது மத்திய அரசு நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டுவர தீவிர முயற்சி மேற்கொண்டது.