அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 பரவல் தொடர்ந்து தீவிரமாகவே காணப்படுகிறது. குறிப்பாக, பிரிட்டனில் உருமாறிய கரோனா பரவல் காரணமாக நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
தற்போது அங்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் மக்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். புதிய தடுப்பூசிகள் உருமாறிய கரோனாவை தடுத்து நிறுத்தம் திறன் கொண்டவை. இருப்பினும் தடுப்பூசி அனைவருக்கும் சேர இரண்டு மாதங்களுக்கு மேல் காலம் பிடிக்கும். எனவே, மிகவும் ஆபத்தான உருமாறிய கரோனாவிடமிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என போரிஸ் எச்சரித்துள்ளார்.