மக்களை காப்பதற்காக ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறிய ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனுக்கு எதிராக போர் பிரகடன் செய்தார். இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது , உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து புதின் விவரித்தார்.
வன்முறையை விடுத்து ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.