கரோனா பாதிப்பின் காரணமாக உலக நாடுகள் முடங்கியுள்ள நிலையில், முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தற்போது முழுமையாக முடங்கியுள்ளன. இதன்காரணமாக ஜி20, ஜி7 நாடுகளின் கூட்டம் உள்ளிட்ட முக்கிய அமைப்பின் கூட்டங்களும் நடைபெறவில்லை.
இந்நிலையில், தற்போது பாதிப்பு குறைந்து நிலை சீரடையும் சூழல் தெரிவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதன்காரணமாக, வரும் ஜூன் 10லிருந்து 12ஆம் தேதிவரை ஜி7 நாடுகளின் கூட்டத்தை அமெரிக்காவின் வாஷிங்டன் அருகில் உள்ள கேம்ப் டேவிட் என்ற இடத்தில் நடத்தவும், கூட்டத்தில் ஜி7 நாட்டின் தலைவர்கள் பங்கேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.