உலக நாடுகள் அனைத்தையும் கதிகலங்கச் செய்துவரும் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதன் கோரப்பிடியில் சிக்கிப் பல நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்துவருகின்றன.
மருத்துவத் துறையில் வளர்ச்சி அடைந்த நாடுகள்கூட இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்துவருகின்றன. குறிப்பாக, சீனா, அமெரிக்கா, இத்தாலி, ஈரான், பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளன.
இத்தாலியில் கரோனா பரவலைத் தடுக்க அந்நாடு திணறிவருகிறது. தற்போது வரை 69 ஆயிரத்து 176 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே நேற்று மட்டும் 743 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை இத்தாலியின் மொத்த உயிரிழப்பு ஆறாயிரத்து 820 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கையானது அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் வைரசின் தொற்று விகிதம் சற்று குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க:ஊரடங்கு உத்தரவு எதிரொலி - சபரிமலை கோயில் திருவிழா ரத்து!