தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அணுசக்தி குறித்து அமெரிக்காவுடன் பேச தயார்: ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் - iran foreign minister javad Zarif

தெஹ்ரான்: நிரந்தர அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவது குறித்து அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஸாரிஃப் கூறியுள்ளார்.

Iran FM Javad

By

Published : Sep 23, 2019, 4:06 PM IST

இதுகுறித்து சிபிஎஸ் ஊடகத்தில் ஈரான் அவர் பேசுகையில், "நிரந்தரமான ஒரு அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவது தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார். ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையில் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள மற்ற ஐரோப்பிய நாடுகளும்கலந்துகொள்ள வேண்டும் என்றார்.

மேலும், நடைபெறவுள்ள ஐநா பொதுக்கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோவை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, "இல்லை" என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஈரான் அணுசக்தி விவகாரம்:

ஈரானின் அணுசக்தி லட்சியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அந்நாட்டுடன் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கடந்த 2015ஆம் ஆண்டு JCPOA என்றழைக்கப்படும் 'ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்' செய்துகொண்டன.

இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக ஈரான் செயல்பட்டுவருவாதாகக் கூறிய அமெரிக்கா, 2018 மே மாதம் அதிலிருந்து தன்னிச்சையாக்க விலகியது. அதைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. இதனால் இரு நாட்டிற்கு இடையே தொடர்ந்து கசப்பான உறவுநிலை நீடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details