சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கோவிட்-19 (கொரோனா) வைரஸ் என்ற தொற்று தற்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. இந்த நோய் காரணமாக உலகளவில் இதுவரை நான்காயிரத்து 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உலக சுகாதார அமைப்பால் பெருந்தொற்று (Pandemic) என்ற அறிவிக்கப்பட்டுள்ள கோவிட்-19 வைரசைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமாக முயற்சித்துவரும் வேளையில், சக மனிதனுடன் கைக்குலுக்குவதை நிறுத்திக்கொண்டு இந்திய வழக்கப்படி கைகூப்பி வணக்கம் செலுத்துமாறு இஸ்ரேல், டென்மார்க் நாடுகள் அதன் மக்களை வலியுறுத்திவருகின்றன.