இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற தாக்குதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். சீன தரப்பிலும் உயிரிழப்பு நிகழ்ந்ததாக அந்நாடு தகவல் வெளியிட்டுள்ளது. இச்சம்பவம் இரு நாடுகளுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய - சீன மோதல்: ஐரோப்பிய ஒன்றியம் திடீர் அறிக்கை!
பிரஸ்ஸல்ஸ்: இந்திய, சீன நாடுகள் நிதானத்தை கடைப்பிடித்து, சமரச பேச்சுவார்த்தை நடத்த கேட்டுக்கொள்கிறோம் என ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து அறிந்த ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "லடாக்கில் இந்தியா - சீனா இடையிலான ராணுவத் தாக்குதல் கவலை அளிக்கிறது. இரு நாட்டினரும் நிதானத்தை கடைப்பிடித்து சமரச பேச்சுவார்த்தை நடத்த கேட்டுக்கொள்கிறோம். நம்பிக்கையை வளர்ப்பதும், அமைதியான தீர்வை எட்டுவதும் மிகவும் முக்கியமானது. நாட்டில் அமைதியையும், பாதுகாப்பையும் நிரந்தரமாக நிலைநாட்டுவது அவசியம்" எனக் குறிப்பிட்டிருந்தது.
சிறிது நேரத்திற்கு முன்பு, இருநாடுகளுக்கு இடையிலான பதற்றத்தைக் குறைப்பதற்காக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தையும் நடத்தினர்.