தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தொழிலாளர் சட்டத்திருத்தம் குறித்து சர்வதேச தொழிலாளர் அமைப்பு கவலை - தொழிலாளர் சட்டத்திருத்தம் ilo கவலை

ஜெனிவா : இந்தியாவில் தொழிலாளர் சட்டங்களில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் கவலையளிப்பதாக உள்ளது என சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

labour law suspension ilo express deep concern
labour law suspension ilo express deep concern

By

Published : May 26, 2020, 12:36 PM IST

கோவிட்-19 பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் முடங்கியுள்ளதால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பொருளாதாரத்தை மீட்கும் முயற்சியில் உ.பி., குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள் தொழிலாளர் சட்டங்களில் சில அடிப்படைத் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 10 தொழிற்சங்கங்கள், சர்வதேச தொழிலாளர்கள் அமைப்புக்கு மே 14ஆம் தேதி கடிதம் எழுதின.

இந்த கடிதத்துக்கு கடந்த 22ஆம் தேதி பதிலளித்த சர்வதேச தொழிலாளர் அமைப்பு, "தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் கொண்டுவந்தது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் கவலை தெரிவித்ததோடு, தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அந்த அமைப்புக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ள தொழிற்சங்கங்கள், இந்த இக்கட்டான சூழலில் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை ஒருமனதுடன் காக்க இந்திய அரசிடம் வலியுறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளன.

இதையும் படிங்க : தொழிலாளர் சட்டத்திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு!

ABOUT THE AUTHOR

...view details