சர்வதிகாரி என்றவுடன் சட்டென்று நம் நினைவுக்கு வருபவர், அடால்ஃப் ஹிட்லர். இவர் ஆஸ்திரியாவில் பிறந்தவர். இந்த வீடு 1972ஆம் ஆண்டு ஆஸ்திரியா நாட்டின் உள்துறை கையில் வந்தது.
முதலில் இந்தப் வீடு வாடகைக்கு விடப்பட்டது. அதன்பின்னர் வீட்டின் உரிமையாளர் வீட்டை விற்க மறுத்துவிட்டார். இந்தப் பிரச்னை 2017ஆம் ஆண்டு வெளியான நீதிமன்ற தீர்ப்பு மூலம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் ஹிட்லரின் பிறந்த வீடு தற்போது காவல்நிலையமாக மாற உள்ளது. இதற்கான பணியில் ஆஸ்திரிய கட்டடக் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணிகள் 2022ஆம் ஆண்டு நிறைவடையயுள்ளது.
ஹிட்லர் பிறந்த வீடு காவல் நிலையமாக மாற்றம்! இந்தப் பணிகளுக்கு ஐந்து மில்லியன் யூரோக்கள் செலவிடப்படவுள்ளது. ஆஸ்திரிய அலுவலர்களின் இந்த முன்மாதிரி திட்டம் நாஜி சர்வதிகாரி ஹிட்லரின் பிறந்த வீட்டை மகிமைப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
இதையும் படிங்க: ஹிட்லரின் இனப்படுகொலை - ஒரு ரிப்போர்ட்!