பருவநிலை மாற்றம் குறித்த 2019ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு ஐரோப்பிய நாடான ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் டிசம்பர் 2ஆம் தேதி முதல் டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற்றுவருகிறது. இந்த மாநாட்டில் பருவநிலை மாற்றம் குறித்தும் புவி வெப்பமயமாதல் குறித்தும் பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துவருகின்றனர்.
இந்த மாநாட்டில் பேசிய ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பருவநிலை போராளி கிரேட்டா தன்பெர்க், "பருவநிலை ஆபத்தாக கருதப்படும் புவிவெப்பமயமாதலுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகள் எடுக்காமல் பல அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் மக்களைத் தவறாக வழிநடத்துகின்றனர்.
புவியின் வெப்பம் தற்போதுள்ளதைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்பட்சத்தில் அது பேரழிவுக்கு வழிவகுக்கும். கரியமில வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கான உறுதிமொழிகள் மட்டும் போதாது, புவிவெப்பமயமாதலுக்கு காரணமாகவுள்ள பசுமைகுடில் (கிரீன்ஹவுஸ்) வாயுக்களின் வெளியேற்றத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.