ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உலகளவில் 3 கோடியே 60 லட்சம் பேர் கரோனாவால் பாதிப்பு - உலகளவில் கரோனா பரவல்

உலகளவில் கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 080 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்து 651 பேர் உயிரிழந்துள்ளனர்.

COVID-19
COVID-19
author img

By

Published : Oct 7, 2020, 12:13 PM IST

உலகளவில் கரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. இதுவரை உலகளவில் 3 கோடியே 60 லட்சத்து 44 ஆயிரத்து 735 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 54 ஆயிரத்து 604ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 71 லட்சத்து 48 ஆயிரத்து 967 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 080 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்து 651 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் அதிகளவிலான கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் 77 லட்சத்து 22 ஆயிரத்து 746 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 15 ஆயிரத்து 822 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பிரிட்டன் நாட்டில் கோவிட்-19 பாதிப்பின் இரண்டாம் அலை தற்போது நிலவுவதால் அங்கு பாதிப்பு மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.

இதையும் படிங்க:சீனாவுக்கு செக் வைக்கும் இந்திய - அமெரிக்க கூட்டணி

ABOUT THE AUTHOR

author-img

...view details