வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவோரின் வயது வரம்பை 64ஆக உயர்த்தி அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சமீபத்தில் சீர்திருத்தம் கொண்டுவந்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த பிரான்ஸ் மக்கள் கடந்த 15 நாட்களாக அதிபர் இமானுவேல் அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று நடைபெற்ற பிரமாண்ட பேரணியால் வாகன, ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது. இதனால், பிரான்ஸ் நகரவாசிகளும், சுற்றுலாப் பயணிகளும் நீண்ட நெடிய போக்குவரத்து நெசிலில் சிக்கி அவிதிக்குள்ளாகினர்.
ரயில் சேவை நிறுத்தம் குறித்து பிரான்ஸ் தேசிய ரயில்வே நிறுவனத்தின் அலுவலர் ஒருவர் கூறுகையில், "போராட்டத்தால் பாரிஸில் உள்ள 60 விழுக்காடு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வேறு வழியின்றி ரயில் பயணிகளும், சுற்றுலா ரயில் சேவைக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். சாலை வழியாகச் சென்றவர்கள் போக்குவரத்து நெரிசிலில் சிக்கித் தவித்தனர். பிரான்ஸைச் சுற்றியுள்ள நகரங்களில் ரயில் சேவைகள் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை" என்றார்.