தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

5 ஆண்டுகளில் தேவாலயம் புதுப்பிக்கப்படும் - ஃபிரான்ஸ் அதிபர் உறுதி! - நோட்ரே டேம்

பாரிஸ்: தீ விபத்து நிகழ்ந்த ஃபிரான்ஸின் புகழ்பெற்ற நோட்ரே டேம் தேவாலயம், அடுத்த ஐந்தாண்டுக்குள் முற்றிலும் புதுப்பிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் இமானுவேல் மெக்ரான் உறுதியளித்துள்ளார்.

தீ விபத்திற்கு பிறகான நோட்ரே டேம் தேவாலயத்தின் புகைப்படம்

By

Published : Apr 17, 2019, 9:59 AM IST

ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 850 ஆண்டுகள் பழமைவாய்ந்த நோட்ரே டேம் தேவாலயத்தில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினரின் அபார முயற்சியால் மிகப்பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு அதிபர் இமானுவேல் மெக்ரான், " நோட்ரே டேம் தேவாலயம் அடுத்த ஐந்தாண்டுக்குள் பிரமிக்கதக்க வகையில் அழகாக புதுப்பிக்கப்படும். இந்த தீ விபத்துத்துடன் எங்கள் கதை முடிய போவதில்லை. எப்போது சவால்கள் எதிர்த்து வெற்றி பெற்றுள்ளோம். இதனையும் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது " என்றார்.

இதுவரை, 700 மில்லியன் டாலர்கள் புதுப்பிக்க வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details