தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அல்கொய்தா அமைப்பின் முக்கியத் தலைவர் சுட்டுக்கொலை : பிரான்ஸ் தகவல் - புளோரன்ஸ் பார்லி

பாரிஸ் : அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் வட ஆப்பிரிக்கப் பிரிவின் தலைவர் பஹ் அக் மௌசா, பிரான்ஸ் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் அமைச்சர் புளோரன்ஸ் பார்லி அறிவித்துள்ளார்.

அல்கொய்தா அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை!
அல்கொய்தா அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை!

By

Published : Nov 13, 2020, 6:05 PM IST

சஹேலில் உள்ள ஜிகாதி இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான பஹ் அக் மௌசா மாலியன் சர்வதேச சக்திகளுக்கு எதிரான பல தாக்குதல்களுக்குக் காரணமானவராக கருதப்படுகிறார்.

இந்நிலையில், பிரான்ஸின், சஹேல் பிராந்தியத்தில் செயல்பட்டுவரும் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு எதிரான நடவடிக்கையின்போது, பயங்கவரவாத அமைப்பின் முக்கியத் தலைவரான மௌசா கொல்லப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சஹேல் பிராந்தியத்தில் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த 2014ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ் சிறப்பு ராணுப் பிரிவால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details