பார்சிலினோவில் உள்ள விலங்கியல் பூங்காவில் நான்கு வயதான ஆண் சிங்கத்திற்கும், 16 வயதான மூன்று பெண் சிங்கங்களுக்கும் கரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதையடுத்து, பரிசோதனை செய்து பார்த்ததில் நான்கு சிங்கங்களுக்கும் கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. தற்போது, மருத்துவ சிகிச்சைக்குப் பின் சிங்கங்களின் உடல்நிலை சீராக உள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்பெயினில் 4 சிங்கங்களுக்கு கரோனா - lion corona postive
மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் பூங்காவில் வளர்க்கப்படும் நான்கு சிங்கங்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கரோனா
இதுமட்டுமின்றி, பூங்காவின் இரண்டு விலங்கு காப்பாளர்களுக்கும், கரோனா பாதிப்பு இருந்துள்ளது. எனவே, காப்பாளர்கள் மூலம் தான் சிங்கங்களுக்கு கரோனா தொற்று பரவியிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக சர்வதேச வல்லுநர்களுடன் பூங்கா அலுவலர்கள் கலந்துரையாடி வருகிறார்கள்.