பிரேசிலைக் கண்காணிக்கும் பொறுப்புள்ள தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், கடந்த மாதம் மட்டும் அமேசான் மழைக்காடுகளில் 6 ஆயிரத்து 803 முறை தீ விபத்துக்கள் ஏற்பட்டதாகப் பதிவு செய்துள்ளது. இது 2019ஆம் ஆண்டின் இதே மாதத்தில் 5 ஆயிரத்து 318ஆக இருந்தது.
சுற்றுச்சூழல் வல்லுநர்கள் இந்த உயர்வு குறித்து கவலை தெரிவித்தனர். ஏனெனில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 30 ஆயிரத்து 900 தீ விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டன. பிரேசில் மீண்டும் அதேபோல் தீ விபத்துக்கள் நிகழக்கூடும் என்றும் அஞ்சுகின்றனர். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக பிரேசிலின் அமேசானில் நிலத்தை அழிக்க அதிபர் ஜெய்ர் போல்சனாரோ அழைப்பு விடுத்துள்ளதற்கு மத்தியில் தீ விபத்து அதிகரித்துள்ளது.
அந்தக் கவலைகளை நிவர்த்தி செய்து, ஜூலை 16ஆம் தேதி, பான்டனல் ஈர நிலங்கள் மற்றும் அமேசான் காடுகளில் எரிக்க அரசாங்கம் நான்கு மாதங்கள் தடை விதித்தது. அமேசானில் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ராணுவத்திற்கு மே மாதத்தில் போல்சனாரோ ஒரு உத்தரவை பிறப்பித்தார்.