தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

Europe coronavirus: ஐரோப்பாவை மீண்டும் மிரட்டும் கரோனா - இரு நாடுகளில் லாக்டவுன் - சர்வதேச செய்திகள்

ஐரோப்பிய கண்டத்தில் மீண்டும் கோவிட்-19 பெருந்தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் லாக்டவுன் அறிவித்துள்ளன.

World Health Organization
World Health Organization

By

Published : Nov 25, 2021, 12:02 PM IST

ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கோவிட்-19 பெருந்தொற்று மிரட்டத்தொடங்கியுள்ளது. உலக சுகாதார அமைப்பின்(World Health Organization) புள்ளிவிவரப்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று எண்ணிக்கை 11 விழுக்காடு உயர்ந்துள்ளது.

இந்த சூழலில் ஐரோப்பிய நாடுகள் அவசரகால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளுகே(Hans Kluge) எச்சரித்துள்ளார்.

மீண்டும் மிரட்டும் கோவிட்-19

உலக சுகாதார அமைப்பு தகவலின்படி, இதுவரை ஐரோப்பிய நாடுகளில் 100 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் ஆஸ்திரியா, நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 தொற்று மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது.

இதேநிலை நீட்டித்தால் ஐரோப்பிய கண்டத்தில் மேலும் ஏழு லட்சம் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது எனவும், முககவசம், தனிநபர் இடைவெளி போன்ற நடவடிக்கை எடுபடாத பட்சத்தில் மீண்டும் லாக்டவுன் அறிவிப்பை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இரு நாடுகளில் லாக்டவுன்

பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக ஆஸ்திரியா மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் லாக்டவுன் அறிவித்துள்ளன. வரும் பிப்ரவரி முதல் ஆஸ்திரியாவில் தடுப்பூசி கட்டம் செலுத்தியிருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

ஸ்லோவாக்கியாவில் மருத்துவமனை சிகிச்சையில் இருக்கும் 83 விழுக்காடு கோவிட் நோயாளிகள் தடுப்பூசி செலுத்தாதவர்களே என புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:Bulgaria Bus Crash: பல்கேரியா பேருந்து விபத்தில் 46 பேர் மரணம்

ABOUT THE AUTHOR

...view details