ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், கடந்த வாரம் போர்ச்சுகலுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தார். அங்கு பிரஸ்ஸல்ஸில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் இரண்டு நாள் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட வான், அடுத்ததாக மாநில கவுன்சிலின் சிறப்புக் கூட்டத்தில் கலந்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வான் கலந்துகொண்ட கூட்டத்தில் பங்கேற்ற நபர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்திக்கொண்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "நான் பங்கேற்ற கூட்டத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், செவ்வாய்க்கிழமை வரை தனிமைப்படுத்திக் கொள்கிறேன். என் உடல்நிலை மிகவும் சீராக உள்ளது. வீட்டிலிருந்தபடியே அலுவலகப் பணியை மேற்கொள்வேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல், ஐரோப்பிய ஆராய்ச்சி ஆணையர் கேப்ரியல் கூறுகையில், "சோதனை முடிவுகள் நிலுவையில் உள்ளதால், நானும் முழு குழுவும் பொது சுகாதார நெறிமுறைகளுக்கு ஏற்ப சுயமாக தனிமைப்படுத்தப்பட்டு வீட்டிலிருந்து வேலை செய்கிறோம். எனக்கு உடல்நிலை சீராக உள்ளது. அறிகுறிகளும் இல்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்