பல்கேரியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் குழந்தைகள் உள்பட 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 12 குழந்தைகளும் அடக்கம். படுகாயமடைந்த ஏழு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தில் பயணம் செய்தவர்கள் பெரும்பாலானோர் சுற்றுலாவாசிகள். துருக்கி நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர்கள் அங்கிருந்து திரும்பிவந்த வேளையில் இந்த கோர விபத்து(Bus crash in Bulgaria) நடைபெற்றுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து உரிய விவரம் தெரியவில்லை என பல்கேரிய உள்துறை அமைச்சர் போய்கோ ராஷ்கோவ் தெரிவித்துள்ளார்.