ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என 2016ஆம் ஆண்டு அந்நாட்டு மக்கள் வாக்களித்தனர். இதனையடுத்து, பிரிட்டனின் வெளியேற்றம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து இருதரப்பிற்கு இடையே நடந்த பலகட்ட பேச்சுவார்த்தையின் விளைவாக 2018 நவம்பர் மாதம், பிரெக்ஸிட் வெளியேற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஜூன் மாதம் மீண்டும் பிரெக்ஸிட் வாக்கெடுப்பு
லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மும்முறை நிராகரிக்கப்பட்ட பிரெக்ஸிட் வெளியேற்ற ஒப்பந்தத்திற்கு, அந்நாட்டு எம்பிக்கள் ஜூன் மாதம் மீண்டும் வாக்களிக்க உள்ளனர்.
பிரிட்டன் பிரதமர் தெரேசா மே இந்த ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்ற ஒப்பதலை பெற முயற்சித்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த ஒபந்தமானது மும்முறை நாராகரிக்கப்பட்டது. இதனால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்காக விதிக்கப்பட்டிருந்த 2019 மார்ச் 29ஆம் தேதியை, அக்டோபர் 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்து ஐரோப்பிய ஒன்றியம் உத்தரவிட்டது.
இதனிடையே, பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற மீண்டும் நான்காவது முறையாக, வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.