பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள இயேசு கிறிஸ்துவின் திருவுருவச் சிலையில் சுகாதாரப் பணியாளர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.
புதிய கரோனா வைரஸ் கோவிட்-19 பெருந்தொற்று நோயின் தாக்கம் காரணமாக, மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போன்று பிரேசிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கடும் கட்டுப்பாடுகள் காரணமாக இங்கு பாதிப்புகள் குறைவு. எனினும் இந்த பெருந்தொற்று நோயை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேராயர் ஓரானி டெம்பெஸ்டா ஞாயிற்றுக்கிழமை, “சிலை அடிவாரத்தில் தனியாக ஒரு ஈஸ்டர் விழாவை நடத்தினார்.
சீனா, அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிரேசில் உள்ளிட்ட கரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நாடுகளின் தேசியக் கொடிகள் சிலையின் மீது காண்பிக்கப்பட்டது.
நிறைவாக இயேசு கிறிஸ்துவின் சிலைக்கு மருத்துவர் உடை அணுவிக்கப்பட்டது. மேலும் மருத்துவமனைகளில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்களை கௌரவிக்கம் வகையில் அவர்களின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டது.
அப்போது வீட்டுக்குள் இருங்கள், சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள் மற்றும் ஒற்றுமையுடன் இருங்கள் என்பன போன்ற வாசகங்களும் காண்பிக்கப்பட்டன.
பிரேசிலிலில் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு 22 ஆயிரத்து 169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 1,223 ஆக உள்ளது. பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை இரண்டாயிரத்து 855 பாதிப்புகள் மற்றும் 170 இறப்புகளால் பதிவாகியுள்ளன.