தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

முன்னாள் அதிபருடன் நல்ல உறவு வைத்திருந்தேன். பிரிட்டன் பிரதமர் பேச்சால் சர்ச்சை! - டிரம்ப் முன்னாள் அதிபர் என குறிப்பிட்ட பிரிட்டன் பிரதமர்

லண்டன்: ட்ரம்ப்பை முன்னாள் அதிபர் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

rump
rump

By

Published : Nov 12, 2020, 2:55 PM IST

அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ. பைடன் தேர்வாகியுள்ளார். அதேபோல், துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ள போதும் அவர் 2021ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி முறைப்படி அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். ஆனால், தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.

இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ட்ரம்ப்பை முன்னாள் அதிபர் என குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

இதுகுறித்து அவர் கூறுகையில், " முன்னாள் அதிபருடன்(ட்ரம்ப்) எனக்கு நல்ல உறவு இருந்தது. வெள்ளை மாளிகையுடன் நல்ல உறவை வைத்திருப்பது அனைத்து பிரிட்டிஷ் பிரதமர்களின் கடமையாகும். மேலும், புதிய பைடன் - ஹாரில் நிர்வாகம் பல துறைகளில் எங்களின் சிந்தனைகளை கொண்டுள்ளனர். அடுத்த ஆண்டில் நடைபெறும் உச்சி மாநாட்டின் போது, புதிய அதிபர் பைடன் செய்ய விரும்பும் திட்டங்கள் குறித்து கேட்பது மகிழ்ச்சியாக இருந்தது" எனத் தெரிவித்தார்

ABOUT THE AUTHOR

...view details