1998 மே 28ஆம் தேதி பலுசிஸ்தானில் பாகிஸ்தான் அரசு அணு சக்தி சோதனை நடத்தியது. இந்நிலையில், இதன் 31ஆம் ஆண்டை முன்னிட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனியின் ஹான்ஒவர் நகரில் சிலர் போராட்டம் நடத்தினர்.
பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - போராட்டகாரர்கள் வலியுறுத்தல்! - demands
பெர்லின்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 1998ஆம் ஆண்டு அந்நாட்டு அரசு நடத்திய அணு சக்தி சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனியில் நடைபெற்ற போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதில், பலுசிஸ்தானில் உள்ள பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தியவாறு முழக்கமிட்டனர். மேலும், அணு சக்தி சோதனையில் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களும் போராட்டத்தில் இடம்பெற்றிருந்தன.
பலுசிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்களை வெளியேற்றவும், பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கவும் ஐ.நா., சர்வதேச அணு சக்தி நிறுவனம் ஆகியவற்றிற்கு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்தனர்.