தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழப்பு

இஸ்தான்புல்: கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட பனிச்சரிவில் கடந்த மூன்று நாள்களில் மட்டும் 33 பேர் உயிரிழந்திருப்பதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

By

Published : Feb 6, 2020, 12:13 PM IST

avalanches-kill-33-in-eastern-turkey
avalanches-kill-33-in-eastern-turkey

கிழக்கு துருக்கியில் குளிர்காலம் என்பதால் அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே பனிச்சரிவுகள் ஏற்பட்டு, விபத்துகள் தொடர்ந்து நடக்கிறது. நேற்று வேனில் பயணம் செய்த ஒன்பது பேர் இந்தப் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.

இதுகுறித்து ஆளுநர் மெஹத்ன் எமின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இதுவரை பனிச்சரிவில் சிக்கிய 14 மீட்புப் படை வீரர்களின் உடல்களும் ஒன்பது பொதுமக்களின் உடல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ஒன்பது பொதுமக்களும் வேனில் வந்தபோது பனிச்சரிவில் சிக்கியதாகத் தெரிகிறது.

இந்தப் பனிச்சரிவில் பேருந்தில் வந்த ஐந்து பேர் சிக்கி உயிரிழந்துள்ளனர். பனிச்சரிவில் சிக்கியவர்கள், உயிரிழந்தவர்கள் ஆகியோரின் உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்துவருகிறது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்'' என்றார்.

இதனைப்பற்றி அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் கோகா, உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆளுநர் பேரிடர் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். தற்போது அவர்களுடன் இணைந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: தலைவலியால் அவதிப்பட்ட நபர் - சோதனையில் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details