கரோனா பெருந்தொற்று காரணமாக, மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போன்று ஆஸ்திரியாவிலும் ஊரடங்கு அமலில் உள்ளது.
இதனிடையே, பொருளாதாரத்தை மீண்டும் இயல்புக்குக் கொண்டு வர, அந்நாட்டு அரசு படிப்படியாக ஊரடங்கைத் தளர்த்தி வருகிறது. அந்த வகையில், சில கட்டுப்பாடுகளுடன் உணவகங்கள் செயல்படலாம் எனச் சமீபத்தில் ஆஸ்திரிய அரசு அறிவித்தது.
இந்நிலையில், அந்நாட்டு அதிபர் அலெக்ஸாண்டர் வேன் தெர் பில்லென் நேற்று நள்ளிரவு ஒரு உணவகத்துக்கு வெளியே அமர்ந்து கொண்டு, உணவு உண்டதாக ஊரடங்குகளில் செய்தி வெளியானது.
ஆனால், இரவு 11 மணிக்கு மேல் உணவகங்கள் திறந்திருக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சூழலில், அதிபரே அதனை மீறியது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தன் தவறை ஒப்புக்கொண்ட ஆஸ்திரிய அதிபர் அலெக்ஸாண்டர் மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
இதுகுறித்து ட்வீட் செய்திருந்த அவர், "பல நாட்கள் கழித்து மனைவி, நண்பர்களுடன் உணவகம் சென்றிருந்தேன். பேசிக்கொண்டே நேரம் என்னவென்பதை மறந்துவிட்டோம். ஊரடங்கு விதிகளை மீறியதற்கு மிகவும் வருந்துகிறேன். என்னை மன்னியுங்கள். இது என்னுடைய தவறுதான்" எனக் கூறியுள்ளார்.
இதையும் பசடிங்க : சென்னையில் இன்று முதல் தொழிற்பேட்டைகள் இயங்கலாம் - தமிழ்நாடு அரசு அரசாணைம