தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 27, 2019, 8:45 PM IST

ETV Bharat / international

அமேசான் காட்டுத்தீ: ஜி7 உதவி நிதியை உதறித்தள்ளும் பிரேசில்

பிரெசிலியா: அமேசான் மழைக்காடுகளில் பரவிவரும் காட்டுத் தீயை அணைப்பதற்கு ஜி7 நாடுகள் அறிவித்துள்ள உதவி நிதியை பிரேசில் பிரதமர் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

Brazil president bolsonaro

அமேசானில் கடந்த இரண்டு வாரங்களாக மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ பரவிவருகிறது. இதனை அணைக்கும் முயற்சியில் பிரேசில் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகள் போராடி வருகின்றன.

இந்நிலையில், இந்த நாடுகளுக்கு உதவும் பொருட்டு பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட ஜி7 வல்லரசு நாடுகள் ரூ. 157 கோடி நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளன.

ஆனால், இதனை ஏற்க மறுக்கும் பிரேசில் பிரதமர் பொல்சோனாரோ, " நன்றி. ஆனால், இந்த உதிவி நிதியானது ஐரோப்பாவில் காடுகளை மீட்டெடுப்பதில் மிகவும் உதவியாக இருக்கும். நாட்ரே டேம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தை முன்கூட்டியே தவிர்க்கக் கோட்டைவிட்ட அதிபர் மேக்ரான் எங்களுக்கு பாடம்புகுட்டுகிறார். முதலில் பிரான்ஸ், அதன் கட்டுப்பாட்டில் உள்ள காலணிகளை கவனிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details