விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி பயணிகளின் கட்டணம் உயரும் என்று தெரிகிறது. பயணிகள் சேவை கட்டணத்திற்கு பதில் விமான பாதுகாப்பு கட்டணத்தை பயணிகள் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
ஜூலை 1 முதல் விமான கட்டணம் உயர்வு!
விமான பாதுகாப்பு கட்டணம் அதிகரிக்க உள்ளதால் பயணிகளின் கட்டணமும் உயர வாய்ப்புள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விமான கட்டணம் உயர்வு
உள்நாட்டு விமான பாதுகாப்பு கட்டணம் 130ரூபாயிலிருந்து 150 ரூபாயாகவும், சர்வதேச விமானங்களுக்கு 225 ரூபாயிலிருந்து 336 ரூபாயாகவும் உயர்த்தி விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை அடுத்து ஜூலை 1ஆம் தேதி முதல் விமான பாதுகாப்பு கட்டணம் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதனால் பயணிகளின் விமானக் கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.