கீவ்: உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்.24ஆம் தேதி முதல் ரஷ்யப்போர் தொடங்கியுள்ளது. மேலும், பத்து நாள்களுக்கும் மேலாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வந்தது. இதனிடையே மனிதாபிமான அடிப்படையில் கார்கீவ், சுமி உள்ளிட்ட நான்கு நகரங்களிலிருந்து பொதுமக்களை வெளியேற்றும் நோக்குடன் போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்தது.
தற்போது, இந்த மனிதாபிமான பாதையின் வழியாகப் பல்வேறு மக்கள் பெலாரஸ், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு சென்றுகொண்டிருக்கும் நிலையில், இந்த பாதையை பயன்படுத்தி இந்தியர்கள் உடனே வெளியேற வேண்டும் என உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
தூதரகம் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"தற்போது உள்ள உக்ரைனில் சிக்கியுள்ள மக்கள் உடனடியாக வெளியேற, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று (மார்ச் 8) காலை 10 மணியளவில் மனிதாபிமான பாதைகள் திறக்கப்பட்டுள்ளன. அந்த பாதையைப் பயன்படுத்தி உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் அந்நாட்டை விட்டு உடனடியாக வெளியேறவும்.