கரோனா வைரஸ் பெருந்தொற்று உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. இத்தாலியில் நேற்று முன்தினம் மட்டும் 793 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று உயிரிழப்பு சம்பவம் 651ஆகக் குறைந்துள்ளது. இதன்மூலம், மொத்த எண்ணிக்கை ஐந்தாயிரத்து 476 ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலியில் ஒரே நாளில் 651 உயிரிழப்பு
ரோம்: கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இத்தாலியில் ஒரே நாளில் 651 பேர் உயிரிழந்துள்ளனர்.
Italy
ஸ்பெயின் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 394 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இந்நோயால் உலகம் முழுவதும் 14 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.