தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

விமானப் பள்ளி மாணவர்களுடன் வெடித்த விமானம்! - கார்கீவ் விமான விபத்து

கீவ்: உக்ரைன் விமானப் பள்ளி மாணவர்களைக் கொண்ட உக்ரேனிய ராணுவ விமானம் நேற்று (செப் 25) தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.

விமானப் பள்ளி
விமானப் பள்ளி

By

Published : Sep 27, 2020, 6:45 AM IST

உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் விமானப் பள்ளி மாணவர்களுடன் தரையிறங்க இருந்த ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக கார்கிவ் பிராந்திய ஆளுநர் ஒலெக்ஸி குச்சர் நேற்று தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு உள்ளூர் செய்தித்தாள், உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சக ஆதாரத்தை மேற்கோள்காட்டி இயந்திரம் செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, இந்த விமானத்தில் 28 பேர் இருந்தனர். அதில் 21 விமானப் பயிற்சி மாணவர்கள், ஏழு குழு உறுப்பினர்கள் இருந்தது தெரியவருகிறது.

சமீபத்திய தகவல்களின்படி, விமானத்தில் வரும்போதே அதன் இன்ஜின் செயலிழந்து போனதாக அதன் விமானி ரேடியன்(radion) மூலம் தெரிவித்துள்ளதாகவும், பின்னர் விபத்தில் 25 பேர் உயிரழந்துள்ளதாகவும், இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேசமயம் சுகுவேவைச் சேர்ந்த 30 வயது மேஜரான விமானி, விபத்தில் இறந்துவிட்டதாகவும் அதன் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நச்சு கலந்த தண்ணீரை குடித்ததால் 330 யானைகள் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்!

ABOUT THE AUTHOR

...view details