கரோனா வைரஸ் நோயால் உலக நாடுகள் பெரும் பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நோய்த் தொற்று காரணமாக ஸ்பெயின் நாட்டில் இதுவரை 27,459 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,30,000 தாண்டியுள்ளது.
கரோனாவிலிருந்து குணமடைந்த 113 வயது மூதாட்டி - கரோனாவிலிருந்து குணமடைந்த 113 வயது மூதாட்டி
மாட்ரீட்: ஸ்பெயினைச் சேர்ந்த 113 வயது மூதாட்டி கரோனா வைரஸ் நோயிலிருந்து குணமடைந்துள்ளார்.
இந்நிலையில், கடோலோனியாவைச் சேர்ந்த 113 வயது மூதாட்டியான மரியா பிரன்யாஸ் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். வயது முதிர்ந்த 17 பேர் தொற்று காரணமாக அந்த மருத்துவமனையில் உயிரிழந்தனர். ஆனால், மன உறுதியை வெளிப்படுத்திய மரியா நோயிலிருந்து குணமடைந்துள்ளார். ஸ்பெயின் நாட்டில் தொற்றிலிருந்து குணமடைந்த வயதான நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் மக்கள் வாழ்க்கை முறைகளை மாற்றியமைக்க வேண்டியிருக்கும்!