சீன தேசத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள தனது போட்டியாளர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆட்சி விமர்சகர்கள் என இலக்கு வைத்து அரசியல் தளத்திலிருந்து அனைவரையும் அகற்றும், அரசியல் ஒடுக்குமுறையை ஜி ஜின்பிங் ஏவிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது என வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஆகஸ்ட் மாதத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் நடத்திய ஊழல் எதிர்ப்பு பரப்புரையின் ஒரு பகுதியாக நூற்றுக்கணக்கானவர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதே போல், கம்யூனிஸ்ட் சீனாவின் தந்தை என போற்றப்படும் மாவோ சேதுங்கின் படங்களுக்கு அடுத்தப்படியாக ஜி ஜிங்பிங்கின் உருவப்படங்களை சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதிகளில் பரவலாக வீடுதோறும் வைக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு, பொருளாதாரத்தை சீர்குலைத்தல், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுடனான பதற்ற நிலை என சீன அதிபருக்கு அழுத்தம் அதிகரித்துக்கொண்டே இருந்தாலும் கட்சி, ஆட்சி இரண்டிலும் அதிகாரத்தை தக்க வைக்க ஜி ஜின்பிங் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் நிலைமையை இன்னும் மோசமாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.