'ஒன் பெல்ட் ஒன் ரோட்' என்றழைக்கப்படும் புதிய பட்டுப்பாதையை அமைக்கும் பணியில் சீனா மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. அதற்காக, உலகம் முழுவதிலும் உள்ள 152 நாடுகளின் உள்கட்டமைப்புப் பணிகளை சீனா மேற்கொண்டுவருகிறது.
இந்த பிரம்மாண்ட திட்டத்தின் முக்கிய நாடான பாகிஸ்தானில் பல்வேறு நெடுஞ்சாலை, ரயில் பாதை, துறைமுகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள அந்நாட்டிற்கு சீனா பல்லாயிரம் கோடி செலவில் முதலீடு செய்துள்ளது. இதற்கு பாகிஸ்தான்-சீனா பொருளாதார காரிடார் என்று பெயர்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக பாகிஸ்தானின் பலோசிஸ்தானில் சீனா மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகளுக்கு எதிராக பலோசிஸ்தான் விடுதலைப் படைகள் என்னும் பயங்கரவாத அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். சமீபத்தில், குவாதர் பகுதியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மீது இந்த அமைப்பினர் பயங்கர தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், சீனா மற்றும் பாகிஸ்தானை மிரட்டும் வகையில் அந்த அமைப்பினர் தற்போது காணொளி ஒன்று வெளியிட்டுள்ளனர்.