தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'சீன பொருட்கள் மீது அதிக வரி விதிக்கமாட்டோம்..!' - ட்ரம்ப் உறுதி

ஒசாகா: "சீன பொருட்கள் மீது மீண்டும் அதிக வரி விதிக்கமாட்டோம்" என்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

china

By

Published : Jun 29, 2019, 8:18 PM IST

ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 நாடுகளின் 14வது உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், சீன அதிபர் ஷிஜிங் பிங்கும் சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பின் போது இருநாடுகளுக்கும் இடையே நிலவிவந்த வர்த்தகப் பேரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அவர்கள் ஒப்புக்கொண்டதாக, ஜிங்ஹுவா செய்தி நிறுவனம் பதிவிட்டிருந்தது.

இதுகுறித்து சீன அதிபர் ஷிஜிங் பிங் கூறுகையில், "அமெரிக்கா சீனாவிற்கு பலன்களை பெற்றுத்தருவது ஒத்துழைப்பே.. மோதல் அல்ல. மோதலை விட, பேச்சுவார்த்தைதான் சிறந்தது" என்றார். இதனிடையே, சீன பொட்கள் மீது மீண்டும் அதிக வரி விதிக்கமாட்டோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

கடந்த மாதம், 250 பில்லியன் ( சுமார் ரூ.17 லட்சம் கோடி ) மதிப்புள்ள சீன பொருட்கள் மீது அதிபர் ட்ரம்ப் அதிக வரி விதித்ததோடு, அமெரிக்காவின் வலியுறுத்தல்களுக்கு சீனா இணங்கவில்லை என்றால், மேலும் 300 பில்லியன் டாலர் ( ரூ.20 லட்சம் கோடி) மிதிப்புள்ள சீன பொருட்கள் மீது அதிக வரி விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்கள் மீது சீனா அதிக வரி விதித்தது.

இந்த பேச்சுவார்த்தை மூலம், இருநாடுகளுக்கும் இடையே ஏறக்குறைய ஒரு வருடமாக நிலவிவந்த வர்த்தகப் போரானது, தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details