பெய்ஜிங்:உலகிலேயே முதல் முறையாக, 2019ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து உலகின் பிற நாடுகளிலும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டதாக, அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டிவந்தது. இதற்கு சீன அரசு மறுப்புத் தெரிவித்தது.
தொடர் குற்றச்சாட்டுகளால் பதற்றம் நிலவவே, கரோனா எவ்வாறு பரவத்தொடங்கியது என்பது குறித்து ஆய்வுசெய்ய வேண்டும் என அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கோரிக்கைவிடுத்தன.
இந்தக் கோரிக்கையினை ஏற்ற உலக சுகாதார அமைப்பு, அறிவியல் வல்லுநர் குழுவினர் கரோனா பரவல் குறித்து சீனாவில் ஆய்வு மேற்கொள்வார்கள் என அறிவித்தார்கள்.