ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த சட்டப்பிரிவு 370ஐ இந்திய அரசாங்கம் அண்மையில் நீக்கியது. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனத்தை பதிவு செய்ததுடன் வெளியுறவு விவகாரங்கள் தொடர்பாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தானைத் தவிர மற்ற உலக நாடுகள் எதுவும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை நேரடியாக முன்வைக்கவில்லை. குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் அத்துடன் ஐக்கிய நாடுகள் சபை என உலக அரங்கில் இந்தியாவுக்கு எந்தவித அழுத்தமோ, எதிர்குரலோ எழவில்லை.
பிரதமர் மோடி தலைமையிலான வெளியுறவு கொள்கை, இந்தியாவுக்கு பெரும் சாதகமான வகையில் உள்ளதால், எந்தவித சிக்கலும் இன்றி இந்த விவகாரம் கையாளப்பட்டுவருகிறது. குறிப்பாக இஸ்லாமிய நாடுகளாக் கருதப்படும் மத்திய கிழக்கு, அரபு நாடுகள் இந்த விவகாரத்தில் எதிர்வினைகள் எதுவும் ஆற்றாமல் இருப்பது இந்தியாவின் ராஜரீக வெற்றியாகக் கருதப்படுகிறது.