அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் 2016 ஆம் ஆண்டு பதவியேற்றதையடுத்து, ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதனையடுத்து, பிற நாடுகளின் ஆதரவுடன் ஒப்பந்தத்தில் ஈரான் தொடர்ந்து நீடித்து வருகிறது. எனினும், விதிமுறைகளை பின்பற்ற முடியாது என்று ஈரான் அறிவித்தது.
இந்நிலையில், சில வாரங்களாக ஈரான், அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் தொடர்ந்து அதிகரித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய சூழலில், ஏவுகணை தாக்குதல்கள் உள்ளிட்டவைகளை முறியடிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 600 அமெரிக்க படைகள் மத்திய கிழக்கு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மேலும் 900 படைகள் விரைவில் அங்கு அனுப்பப்படும் என்றும் அமெரிக்க ராணுவத்தின் தலையகமான பென்டகன் அறிவித்துள்ளது.