வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க - தலிபான் ஒப்பந்தம் கையெழுத்தான சில தினங்களிலேயே இரு தரப்பும் மோதத் தொடங்கியுள்ளது. நேற்று ஆப்கானிஸ்தானில் தலிபான் நடத்திய தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து அமெரிக்கப் படையினர் நேற்று தலிபான் படைத்தளங்களில் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலை அமெரிக்க ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் உறுதிபடுத்தியுள்ளார்.
2001ஆம் ஆண்டு இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப்பின் ஆப்கானிஸ்தானை அமெரிக்கா படையெடுத்தது. இதைத்தொடர்ந்து சுமார் 20 ஆண்டுகள் தொடர்ந்த போரில், பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அமெரிக்க தரப்பிலும் ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்தனர்.