2018ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர இரு நாடுகளும் முடிவெடுத்ததையடுத்து, சீரான இடைவேளையில் எட்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில், சீன தலைநகர் பெய்ஜிங்கில் இரு நாட்டு மூத்த அதிகாரிகளும் இதுதொடர்பாக அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.
அமெரிக்கா - சீனா இடையே அடுத்த வாரம் வா்த்தக பேச்சுவார்த்தை!
பெய்ஜிங்: அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் முதல் தொடங்கும் என அமெரிக்க கருவூல செயலர் ஸ்டீவன் நுச்சின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர் தொடர்பான பேச்சுவார்த்தை
இந்த விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்காவின் கருவூல செயலர் ஸ்டீவன் நுச்சின், "பெய்ஜிங்கில் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுதொடர்பான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை மேற்கொள்ள சீன துணை பிரதமர் லியூ கி அடுத்த வாரம் வாஷிங்டன் வரவுள்ளார்" என்றார்.
இதற்கிடையே, இரு நாடுகளும் வார்த்தக போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இறுதி ஒப்பந்தத்தை ஏப்ரல் மாத இறுதியில் மேற்கொள்ளும் என தகவல் வெளியாகியுள்ளது.