இன்று சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கரோனா வைரஸ் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "கரோனா தொற்று நோய் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்து ஏறக்குறைய ஒரு வருடம் ஆகிறது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக பலரது எதிர்காலங்கள் கேள்விக்குறியாகியுள்ளது.
குறிப்பாக தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குழந்தைகளையும், இளைஞர்களையும் பெரும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி, சமீபத்திய ஆய்வுகளின்படி, இளைஞர்களும், குழந்தைகளும் அதிகளவு கரோனா தொற்றினால் பாதிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. இவர்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களும் வெளியாகியுள்ளது.
இந்த கரோனா வைரஸ் உலக நாடுகளின் வறுமை நிலையை மேலும் அதிகரித்துள்ளது. கல்வி, சுகாதார பாதுகாப்பு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இது ஊட்டச்சத்து, குழந்தைகள் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் விதமாக அமைந்துள்ளது.
கடுமையான உலகளாவிய பொருளாதார மந்தநிலை என்பது குழந்தைகளை வறுமையில் ஆழ்த்துவதோடு, முன்பே இருக்கும் ஆழமான ஏற்றத்தாழ்வுகளையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இவற்றை மாற்ற இந்த குழந்தைகள் தினத்தில் யுனிசெஃப் உறுதி எடுக்கிறது.
தற்போதைய நிலவரப்படி 11 விழுக்காடு குழந்தைகளும், இளைஞர்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான பின்தங்கிய குடும்பங்கள் வேலை, வாழ்வாதாரம், வருமானம், கல்வி, சுகாதாரம் மற்றும் பிற தேவைகளுக்காக மிகவும் உழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்" என யுனிசெஃப் வருத்தம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் அதிகரிக்கும் கோவிட்-19 பாதிப்பு : ஒரேநாளில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானது!