இந்திய-பாகிஸ்தான் எல்லையில் எப்போதும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், இந்திய பாதுகாப்புப் படையினர் எந்நேரமும் எச்சரிக்கையாகவே கண்காணிப்புப் பணியில் ஈடுபவர்.
இந்நிலையில், இன்று காலை (டிச. 06) பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஹவேலி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் இந்திய எல்லையான பூஞ்ச் பகுதிக்குள் வந்தனர்.
இதைக் கவனித்த இந்திய பாதுகாப்புப் படையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அப்பாஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்த லாய்பா ஜாபைர் (17), சனா ஜாபெய்ர் (13) ஆகிய இரண்டு சிறுமிகளும் தவறுதலாக எல்லைக்குள் வந்தது தெரியவந்தது.
அவர்களிடம் சந்தேகத்திற்கிடமான எந்த ஆயுதங்களும் இல்லை. தற்போது அவர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.