தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜி20: " பிரச்னைகளை பேசி தீர்த்துக்கலாம் " ட்ரம்ப் - ஒசாகா உச்சிமாநாடு

டோக்கியோ: இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்வு காண்பதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்வந்துள்ளார்.

ஜி20: " பிரச்னைகளை பேசி தீர்த்துக்கலாம் " ட்ரம்ப

By

Published : Jun 28, 2019, 9:49 PM IST

ஜி20 நாடுகளின் 14வது உச்சிமாநாடு ஜப்பானின் ஒசாவா நகரில் நடைபெற்று வருகிறது.

மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் நேரில் சந்தித்து இருதரப்பு குறித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

அப்போது பேசிய ட்ரம்ப், " நாம் நல்ல நண்பர்களாக இருப்போம் என்பதை உறுதியளிக்கிறேன்.... ராணுவம் உள்ளிட்ட துறைகளில் நாம் இணைந்து செயல்படுவோம்.

வர்த்தகம் தொடர்பாக இந்தியா அமெரிக்கா இடையே நல்லுறவை நீடிக்கும் " எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோக்லே, " இந்தியாவிற்கு அளித்திருந்த பொருளாதார அந்தஸ்தை ( GSP) அமெரிக்கா ரத்து செய்தது தொடர்பாக நமது நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் உடனான பேச்சுவார்த்தையில் பிரதமர் குறிப்பிட்டிருந்தார். இதனை அதிபர் ட்ரம்ப் ஏற்றுகொண்டுள்ளார். வர்த்தகம் தொடர்பான பிரச்னைகளை எப்படி தீத்துவைக்கப் போகிறோம் என்பதை எதிர்நோக்கியுள்ளோம். " எனத் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மோடி சந்திப்பு

முன்னதாக, "இந்தியா அமேரிக்க பொருட்கள் மீது வர்த்தக வரி கட்டணங்களை சில காலங்களாக அதிகரித்து வந்தது. இந்நிலையில் மறுபடியும் வர்த்தக வரி கட்டணங்களை அதிகரித்தது எற்று கொள்ள முடியாதது. எனவே உடனடியாக அமொிக்க பொருட்கள் மீது உள்ள கட்டணங்களைக் திரும்பப் பெற வேண்டும்" என என்று ட்ரம்ப் தன் ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக தெரிவித்திருந்தார்.

எனினும், பிரதமர் மோடியுடனான சந்திப்பில் வர்த்தகப் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்த்துக்கொள்ளலாம் என அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details