தாய்வான் நாட்டில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 34 பேர் உயிரிழந்தனர். அதில், சிக்கி 12க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அந்த ரயிலில் 350 பயணிகள் பயணித்ததாகக் கூறப்படுகிறது.
ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 34 பேர் உயிரிழப்பு
தாய்பெய்: தாய்வானில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 34 பேர் உயிரிழந்த நிலையில், 12க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ரயில் விபத்து
பாறையின் மீது சென்றுக்கொண்டிருந்த ட்ரக் ஒன்று திறை மாறி கீழே விழுந்தது. அது அங்கிருந்து ரயில் தண்டவாளத்தின் அருகே நகர்ந்தது. அப்போது, ரயில் ட்ரக்கின் மீது மோதியதில் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
பெரும்பாலான ரயில் பெட்டிகள் சுரங்கத்தின் அடியே சிக்கியதாகவும் அதனால் ரயிலின் உள்ளே இருந்த பயணிகள் கதவுகள், ஜன்னல்களை உடைத்து தப்பிக்க முயற்சித்தனர். படுகாயம் அடைந்தவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.