பாகிஸ்தானின் கோட்கி பகுதியில் இன்று(ஜுன் 7) காலை லாகூரிலிருந்து கராச்சிக்குச் சென்ற சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில், சர்கோதா செல்லும் மில்லட் எக்ஸ்பிரஸ் ரயில் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 30 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.