கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யாங்செங் நகரில் செயல்பட்டுவரும் ரசாயன ஆலையில் 21 ஆம் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அன்று மதியம் 2.48 மணிக்கு ஏற்பட்ட இந்த விபத்தில், தொழிலாளர்கள் பலர் சிக்கிக் கொண்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர், பலத்த காயமடைந்த தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். முன்னதாக 64 பேர் பலியானதாக கூறப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி மேலும் சிலர் தற்போது உயிரிழந்துள்ளனர்.