ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. 2020ஆம் ஆண்டில் நடைபெற வேண்டிய இத்தொடர், கரோனா பரவல் காரணமாக ஓராண்டு தள்ளிச்சென்றது.
அதேவேளை, ஜப்பானில் கரோனா அலை ஓயாமல் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு போட்டித் தொடர் பார்வையாளர்களின்றி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், வீரர்கள், பங்கேற்பாளர்கள் தங்கியிருக்கும் ஒலிம்பிக் கிராமத்தில் முதல் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இதை ஒலிம்பிக் நிர்வாகக் கமிட்டி உறுதி செய்துள்ளது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் விளையாட்டு வீரர் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.