1959ஆம் ஆண்டு புத்த மத தலைவரான தலாய் லாமா திபெத்திலிருந்து வெளியேறி இந்தியா வந்தடைந்தார். 60 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், திபெத் மக்களின் கடின உழைப்பால்விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவை தொடர்ந்து நவீன முறையில் முன்னேறியுள்ளது.
தலாய் லாமா திபெத்தில் இருந்து வெளியேறிய பிறகு உள்நாட்டு உற்பத்தி 191 சதவீதம் உயர்வு! - திபெத்
பெய்ஜிங்: திபெத்தின் உள்நாட்டு உற்பத்தி 2018ஆம் ஆண்டின்படி 22 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளதாக சீனா வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சீனா வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில், " திபெத்தின் நவீன தொழில்துறை வளர்ச்சியால் சீரான வளர்ச்சி கண்டுள்ளது.1959ஆம் ஆண்டு 15 மில்லியன் யுவானாக இருந்த உள்நாட்டு உற்பத்தி, 2018ஆம் ஆண்டு 11.45 மில்லியன் யுவானாக உயர்ந்துள்ளது.
சுற்றுலாத்துறை சிறந்த முறையில் வளர்ச்சியடைந்துள்ளதால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் அதிகளவிலான வருவாயை ஈட்டியுள்ளனர்.உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து சீராக அமைந்துள்ளது"எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.