சீன நாட்டின், சிறப்பு நிர்வாக பிராந்தியங்களில் (Special Administrative Region) ஹாங்காங் நகரமும் ஒன்றாகும். சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஹாங்காங் அரசையும், அதன் காவல்துறை செய்து வரும் நற்சேவையையும் பாராட்டும் விதமாக, ஹாங்காங்கில் உள்ள தாமர் பூங்காவில்(Tamar Park) மக்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
'கீப் இட் அப்' - ஹாங்காங் அரசுக்கு அந்நாட்டு மக்கள் நன்றி! - Thousands rallied in Hong Kong
பெய்ஜிங்: ஹாங்காங் அரசு மக்களுக்கு செய்துவரும் சேவைகளைப் பாராட்டும் விதமாக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு பேரணியாகச் சென்றனர்.
மக்கள் பேரணி
ஆண்கள், பெண்கள் என சுமார் 47,000 பேர் ஒன்று திரண்டு கைகளில், காவல்துறையினரை பாரட்டும்படி 'கீப் இட் அப் (keep it up)' என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக நடந்து சென்று தங்களின் நன்றியை தெரிவித்தனர்.