புத்த மதத் தலைவரான தலாய் லாமா தன்னுடைய 85ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவருடைய முதல் ஆல்பத்தை ஜூலை 6ஆம் தேதியன்று வெளியிடுகிறார். இந்த ஆல்பத்தில் மந்திரங்கள் மற்றும் போதனைகள் இசையுடன் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது.
தலாய் லாமா ஆல்பம் ஜூலையில் வெளியீடு! - தலாய் லாமா ஆல்பம் வெளியீடு
தலாய் லாமாவின் 85ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய முதல் ஆல்பம் அடுத்த மாதம் ஜூலை 6ஆம் தேதி வெளியாகிறது.
Dalai Lama
இதற்கு நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜூனெல்லே குனின் என்ற இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார். ஞானம், வீரம், இரக்கம் போன்ற தலைப்புகளில் மொத்தம் 11 பாடல்கள் இதில் இடம்பெறுகின்றன. இரக்கத்தை மையமாகக் கொண்ட பாடல் கடந்த செவ்வாய்க்கிழமையன்று வெளியானது. இதனைத் தொடர்ந்து முழு ஆல்பமும் அடுத்த மாதம் ஜூலை 6ஆம் தேதி வெளியாகிறது.
இதையும் படிங்க:கரோனா: மனித குலத்திற்கு அன்னை பூமி உணர்த்தும் பாடம் - தலாய்லாமா